வடக்கில் அண்மையில் நியமனம் பெற்ற 374 பட்டதாரி ஆசிரியர்களும் நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை கடமைகளைப்பொறுப்பேற்க முடியும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் பற்றிக் டிறஞ்சன் அறிவித்துள்ளார். நியமனம் பெற்றவர்கள் நாளை கடமையேற்க வேண்டும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பாடசாலைகள் நாடு முழுவதும் நாளை மூடப்படுவதால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்