23.2 C
New York
Sunday, July 13, 2025
spot_img

மாமன் – மருமகன் சண்டையை விலக்குப் பிடிக்கச் சென்ற இளைஞன் கத்திக்குத்துக்குப் பலி!

யாழ்ப்பாணம் – தாவடியில் தந்தைக்கும், சகோதரியின் கணவனுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையை விலக்குப் பிடிக்கச் சென்ற, இளைஞன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 

23 வயதுடைய வரதராசா நியூட்சன் என்ற இளைஞனே உயிரிழந்தவர் ஆவார்.

கடந்த 2ஆம் திகதி இளைஞனின் தந்தைக்கும் , இளைஞனின் அக்காவின் கணவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு கைக்கலப்பாக மாறியுள்ளது. 

இதையடுத்து குறித்த இளைஞன், மோதலை தடுக்க முற்பட்ட போது, அக்காவின் கணவரின் கத்திகுத்துக்கு இலக்காகி படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டவரை கைது செய்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய போது,, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Latest Articles