-0.4 C
New York
Saturday, January 17, 2026
spot_img

அக்காவுடன் காதல், தங்கை துஷ்பிரயோகம் – கிளிநொச்சி சிறுமிக்கு நேர்ந்த கதி.

கிளிநொச்சி – மலையாளபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியொருவர், மூத்த சகேதரியின் காதலனால்  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்
வழங்கப்பட்டதை அடுத்து, கிளிநொச்சி பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

விசாரணைகளை அடுத்து, சகோதரியின் காதலனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்
பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை  கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துளளனர். சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Latest Articles