26.3 C
New York
Monday, September 15, 2025
spot_img

பாணுக்குள் கண்ணாடித் துண்டுகள் ! யாழில் வெதுப்பகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் பாண் ஒன்றுக்குள் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டமையை அடுத்து, பொது சுகாதார பரிசோதகரிடம் முறையிடப்பட்டுள்ள நிலையில், சுகாதார பரிசோதகர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (21) மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் ஒருவர் பாண் வாங்கியுள்ளார். அதை வீட்டில் சாப்பிட முற்பட்டபோது, பாணுக்குள்ளிருந்து உடைந்த கண்ணாடி போத்தலின் துண்டுகள் காணப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அவர் முன்னெடுத்த விசாரணைகளில் கடைக்கு பாண் விநியோகம் செய்தமை சுன்னாகம் பகுதியில் உள்ள பிரபல வெதுப்பகம் என தெரியவந்துள்ளது.

இந்த வெதுப்பகத்துக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles