23.8 C
New York
Friday, July 17, 2026
spot_img

நேருக்கு நேர் மோதிய காரும் மோட்டார் சைக்கிளும் – 4 பேர் காயம்.

முல்லைத்தீவு – துணுக்காய் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற  விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

மல்லாவி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், துணுக்காய் நோக்கி சென்று கொண்டிருந்த காரும்  நேருக்கு நேர் மோதி  இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது,  மோட்டார் சைக்கிளில் சென்ற துணுக்காய் கல்விளான் பகுதியை சேர்ந்த டேவிட் நிஷாந்த் (28) என்ற இளைஞன் படுகாயமடைந்து,  ஆபத்தான நிலையில் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ,மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை  காரில் பயணித்த 4வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்த நிலையில், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Latest Articles