19.5 C
New York
Sunday, September 14, 2025
spot_img

நாட்டு மக்களுக்கு வரி தொடர்பில் பேரிடி செய்தி!

நாட்டில் எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் சொத்து வரியை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது,

நாங்கள் நாட்டு மக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் வருமானத்தை அதிகரிக்கும் ஏனைய மூலங்கள் தொடர்பாக கவனம் செலுத்துகின்றோம்.

இதுவரை நாட்டில் 20 வீதம் நேரடி வரிகளும் 80 வீதம் மறைமுக வரிகளும் நடைமுறையில் இருந்தன. இன்று நேரடி வரியை 30 வீதமாகவும் மறைமுக வரியை 70 வீதமாகவும் மாற்றியிருக்கிறோம்.

எதிர்காலத்தில் நேரடி வரி 40 வீதமாகவும் மறைமுக வரி 60 வீதமாகவும் மாற வேண்டும். நேரடி வரியை அதிகரிக்கும் போது மூளைசாலிகளின் வெளியேற்றம் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

அப்படி ஒரு சிக்கலும் உண்டு. அதனால்தான் நாங்கள் 2025ஆம் ஆண்டில் சொத்து வரியை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். இலங்கையில் மறைக்கப்பட்ட பல சொத்துக்கள் காணப்படுகின்றன.

எனவே சொத்து வரியை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக அவற்றை செயற்றிறனாக்க முடியும்.

சொத்து வரி என்தும் மக்கள் பயப்படுவார்கள். மக்களுக்கு சுமை ஏற்படும் வகையில் நாம் அதனைச் செய்யமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles