உயிரிழந்த மகனின் மரணச்சடங்கை வீட்டில் செய்ய முடியாத தாயொருவர் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதோடு தேராவில் குளத்தின் மேலதிக நீரை ஜந்து மாதமாக வெளியேற்ற முடியாத அரச நிர்வாகமா முல்லைத்தீவில் உள்ளது என்ற கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
வழமைக்கு மாறக கிடைக்கப்பெற்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேராவில் குளம் நிரம்பி காணப்படுவதோடு மேலதிக நீர் வெளியேற முடியாத நிலை காணப்படுவதால் குளத்தினை அண்மித்த பகுதியில் உள்ள மக்களின் வீடுகள் கடந்த டிசம்பர் மாதம் 18 ம் திகதி முதல் சுமார் நான்கு மாதங்களுக்கு மேலாக குளத்து நீரில் நிரம்பி காணப்படுகின்றது.