-8.1 C
New York
Sunday, December 22, 2024
spot_img

ஹிந்து கோயிலொன்று இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம்- அதிர்ச்சியில் மக்கள்!!

பாகிஸ்தானில் ஹிந்து கோயிலொன்று இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையையொட்டி கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் லாண்டி கோடல் பஜார் நகரில் அமைந்துள்ள ’கைபர் கோயில்’, 1947-ஆம் ஆண்டு முதல், பக்தர்கள் யாரும் வழிபடாத காரணத்தால் மூடப்பட்டுள்ளது.

காலப்போக்கில் சிதிலமைடைந்து காட்சியளித்த கோயில் 10 நாள்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் அமைக்கப்பட உள்ளதாக உள்ளதாக தெரியவந்துள்ளது .

கோயில் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் ஹிந்து கோயில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்களுடைய வரலாற்று கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்து மறுசீரமைப்பது, மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் பொறுப்பு என பாகிஸ்தான் ஹிந்து கோயில் நிர்வாகக் குழு வலியுறுத்தியுள்ளது.-

Related Articles

Latest Articles