15.9 C
New York
Monday, June 16, 2025
spot_img

யாழில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள்

யாழ்ப்பாணத்தில் 33 பாதுகாப்பு அற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றன. 

யாழ்ப்பாணத்திற்கு கடந்த மாதம் ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டு , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போது,  33 பாதுகாப்பு அற்ற கடவைகளையும் பாதுகாப்பான கடவையாக மாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த வருடத்திற்குள் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் , புகையிரத திணைக்களத்திடம் மதிப்பீட்டு அறிக்கைகளும் ஜனாதிபதியால் கோரப்பட்டன. 

ஒரு மாத காலம் கடந்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 

கடந்த வாரம் இணுவில் பகுதியில் வான் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் வானில் பயணித்த மூன்று மாத குழந்தையும் , தந்தையும் உயிரிழந்த நிலையில் தாய் படுகாயமடைந்த நிலையில் யாழ், போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

குறித்த விபத்தினை அடுத்து இரண்டு நாட்கள் ஊரவர்கள் புகையிரத்தை தடுத்து நிறுத்து போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles